தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை, ஆசியாவில் மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய அணை என்ற பெருமையைப் பெற்றது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரில் 8 மெகாவாட் என 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக, அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலை பகுதி மற்றும் வடகேரளாவின் ஒரு சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாறு ஆகிய இரண்டு ஆறுகளிலும் அதிகப்படியான வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம் சுமார் 3 அடி வரை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் அணையின் நீர் அணையில் 105 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. அக்டோபர் மாத இறுதி வரை 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு 102 அடியை எட்டியது. நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி 102 அடியை எட்டியது. அணை கட்டிய காலத்திலிருந்து 25 வது முறையாக 102 அடியை எட்டியுள்ளது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக இன்று காலை பவானிசாகர் அணை 102 அடியை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: முடிஞ்சுது தீபாவளி... சென்னையில் இத்தனை மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகளா? அதிர்ச்சி ரிப்போர்ட்...!
அணையின் மொத்த கொள்ளளவு ஆன 32.8 டி.எம்.சி யில் தற்போது 30.31 டிஎம்சி இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அணைக்கு வரும் உபரி நீரில் 8300 கன அடி நீர் தற்போது 8 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. பாசனத்திற்காக 1000 கன அடி என மொத்தம் 9300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு ஆன 32.8 டி.எம்.சி யில் 30.31 டிஎம்சி இருப்பு உள்ளது.
அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 3 நாட்களாக தூக்கத்தை தொலைத்த பாக்., மக்கள்... தொடர்ந்து குலுங்கிய பூமி... நிபுணர்கள் விடுத்த அதி பயங்கர எச்சரிக்கை...!