சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் நடத்துவது இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆபத்தான போக்காக உருவெடுத்துள்ளது. இந்த செயல், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பல எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது.
சாலைகளில் ஆபத்தான பைக் ரேஸ் என்பது, பொதுவாக நகர்ப்புறங்களில் அல்லது நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, ஒருவரையொருவர் பந்தயத்தில் வெல்ல நினைக்கின்றனர். இதில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் விதிகளை மீறி, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணித்து, தங்களது உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றனர். பெரும்பாலான இந்த ரேஸ்கள் இரவு நேரங்களில் அல்லது வாகன நெரிசல் குறைவாக இருக்கும் இடங்களில் நடைபெறுகின்றன.
இந்த ஆபத்தான பைக் ரேஸ்களின் விளைவுகள் மிகவும் மோசமானவை. அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றாதது ஆகியவை விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இவை பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன. ஒரு சிறிய தவறு கூட பெரிய விபத்தாக மாறி, பல உயிர்களைப் பறிக்கின்றன.
இதையும் படிங்க: சொன்னா கேளுங்கய்யா... விஜய் வாகனத்தை துரத்திச் சென்றபோது விபத்து...!
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பெரு விழா என்பதால் அதிக அளவில் இளைஞர்கள் பைக்குகளில் பயணம் செய்துள்ளனர். சென்னையில் நேற்று இரவு அதிவேகமாக இயக்கப்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிவேகமாக வாகனங்களை ஒட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறி 15 பைக்குகளை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
இதையும் படிங்க: அடடே! ஹெல்மெட் போட்டா ஒரு கிலோ ஆப்பிள்... நூதன முறையில் டிராபிக் போலீஸ் விழிப்புணர்வு...!