தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் கட்சியாக இருந்து, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இருக்கைப் பங்கீட்டை இறுதி செய்தது. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது 2021 தேர்தலில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளை விட ஏழு அதிகம் ஆகும்.
மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில், அதிமுக தனது சின்னத்தில் 169 தொகுதிகளில் போட்டியிடும் என்று இறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள், தமாகா 5 தொகுதிகள், இந்திய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1 தொகுதி மற்றும் புரட்சி பாரதம் 1 தொகுதி ஆகியவை அடங்கும்.
பாஜக வேட்பாளர் பட்டியல் நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருந்து வந்த நிலையில் இன்று வெளியாகியது. இதில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம் பெறுமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பெயர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழல், அலட்சியம் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதர சகோதரிகளே ஆதரவையும் பாஜக வேட்பாளர்கள் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையென்று இந்தியா வலிமையுடனும் பரந்த அளவிலும் முன்னேறி வருவதாகவும் ஆனால், சுயநலமிக்க, ஆணவமிக்க திமுக அரசால் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தான் ஒரு தொண்டனாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக மற்றும் பிற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட அதிருப்தி... பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?... டெல்லி தலைமைக்கு பறந்த மெசெஜ்...!