கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்திய பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவை கொடீசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்க கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தடைந்தார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம் என்று கூறும் பிரதமர் மோடி திருத்தப்பட்ட மரபணு விதையை விவசாயத்தில் புகுத்தி வருகிறார் எனக்கூறி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டன.
இதேபோல், அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாகவும் பிரதமரின் கோவை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவிநாசி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீகார், ஒரிசா தேர்தலின்போது தமிழர்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, பிரதமர் மோடியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியின் உருவபொம்மையை கொளுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING " மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்" - மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்...!
பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாகவும், இந்த போராட்டக்களின் பின்னணியில் திமுகவினர் செயல்பட்டதாகவும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டினர். மேலும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வராததும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று பாஜக இளைஞர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் கோவை வருகையை ஒட்டி பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். கோவை சிவானந்த காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பாக கோவையின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக கோவைக்கு வர வேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தில் டிபிஆர் வேண்டுமென்றே சரிவர தயார் செய்யாமல் மத்திய அரசை குறை கூறும் தமிழக அரசைக் கண்டித்தும், திமுக ஆட்சியில் கோவையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை திமுக அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டி கோவை வரும் தமிழக முதலமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியினர் அனைவரும் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பீகார் தேர்தல் முடிவுகள்: அனைவருக்குமான பாடம்..!! முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன..??