தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது ஒரு நீண்டகால வழக்கமாகும். இத்திட்டம் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட உதவும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டுகளில் இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற அடிப்படைப் பொருட்கள் இடம்பெற்றன. சில ஆண்டுகளில் ரூ.1000 முதல் ரூ.2500 வரை ரொக்கமும் சேர்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணங்களால் சில சமயங்களில் ரொக்க உதவி நீக்கப்பட்டது.
இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.தற்போது, 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: ஆணவத்தின் உச்சியில் கொக்கரிக்கும் அமித் ஷா…! ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? செல்வப் பெருந்தகை கொந்தளிப்பு..!
2021 அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கப்பட்டது என்றும் 2022, 2023 5 ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். எனவே நிலுவைத் தொகை ரூ.5000 சேர்த்து 8000 ரூபாய் வழங்க வேண்டும் என ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை இரண்டாக உடைக்க பாஜக அடுத்த அஸ்திரம்!! சிவசேனாவுக்கு போட்ட அதே ஸ்கெட்ச்!