கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்ட அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியானது. கூட்டணி குறித்த அறிவிப்பை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். பாஜகவின் தமிழக அரசியல் பயணம் என்பது சற்று சறுக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.
திராவிட கொள்கைகளால் தமிழகம் சூழப்பட்டிருக்கும் நிலையில் பாஜகவின் கொள்கை முரண்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அதிமுகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐந்து தொகுதிகள் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அதிமுகவுடன் பாஜக கேட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது நாளை இறுதிச் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. நாளை தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கியூஸ் கோயில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கும் நிலையில் நாளை தொகுதி பங்கீடு முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரின் பேச்சுவார்த்தையின் போது எத்தனை தொகுதிகள் என்பது இறுதியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் 50 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் அதிமுக 30 தொகுதிகள் அளிக்கலாம் எனக் கூறியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இதையும் படிங்க: அதிமுக - 45%, தவெக - 7%, நாதக - 3%- திமுக தலையில் இடியை இறங்கிய முக்கிய சமூகம்... வெளியானது ஷாக்கிங் சர்வே ரிசல்ட்...!
ஏற்கனவே அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன் அதன் பிறகு டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து இருந்தார். இந்த நிலையில் நாளை பியூஸ் கோயில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க இருப்பது தொகுதி பங்கேட்டை முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்டத்தை தொடங்கிய பாஜக... EPS உடன் பியூஷ் கோயல் நாளை அதிமுக்கிய ஆலோசனை...!