காவிரி நதி, தென்னிந்தியாவின் ஜீவநதியாக அறியப்படும் இந்த ஆறு, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் இடையே நீர் பிணக்கைத் தூண்டியுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே தொடர்ந்து வரும் இந்தப் பிரச்னை, சட்டப் போராட்டங்கள், அரசியல் மோதல்கள் மற்றும் சமூக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் தீர்வாக, 1990இல் இடை-மாநில நதி நீர் பிணக்குகள் சட்டத்தின் கீழ் காவிரி நீர் பிணக்குகள் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
17 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, 2007இல் இத்தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதை அடிப்படையாகக் கொண்டு, 2018இல் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம், நதியின் நீர் வளங்களை சமமாகப் பகிர்ந்துகொள்ளவும், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத் தேவைகளைப் பாதுகாக்கவும் முக்கியப் பொறுப்பை ஏற்கிறது.

தற்போதைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தார் (எஸ்.கே. ஹல்தர்) பணியாற்றுகிறார். ஆணையத்தின் முதன்மை பணிகள், காவிரி நதியின் நீரை சேமித்தல், பங்கீடு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டை மேற்பார்வை செய்வதாகும். இந்த நிலையில், 44 வது காவிரி நீர் மேலாண்மை கூட்டம் தொடங்கியது. எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: காவிரி நரிநீர் பங்கீடு... 44வது கூட்டம் தொடக்கம்... தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?
தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் கலந்துக் கொண்டார். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்.. 3 நாட்களுக்கு பேய் மழை இருக்காம்...!