செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புதிய வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ள காலி இடத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின்
அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் செங்கல்பட்டு சின்ன நத்தம் தட்டான்மலை பகுதியை சேர்ந்த அப்புனு என்கிற கேப் ரமேஷ்(40)
என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்த நபருக்கும் செங்கல்பட்டு நகர் பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் அப்பா ஆகியோர் அந்த பெண்ணிடம் கண்டித்து ரமேஷின் தொடர்பை விட்டுவிடும்படி கூறியுள்ளனர்.அதேபோல ரமேஷிடமும் இதுகுறித்து கண்டித்ததாகவும் அதையும் மீறி இருவருமே தொடர்ந்து ஒருவருக்கொருவர் சந்தித்து வந்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் பகீர்...!! - 10ம் வகுப்பு மாணவன் கழுத்தை நெரித்துக் கொலை... கொலையாளியை தேடிய போலீசுக்கு ஒரு கிலோ மீட்டரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி...!
நேரடியாக கண்டித்தும் கள்ள உறவை விடாமல் தொடர்ந்ததால் ரமேஷை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு காத்திருந்த நிலையில் நேற்றிரவு மது அருந்திக் கொண்டிருந்த போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்துபேர் கொண்ட கும்பல் அரிவாளால் ரமேஷை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
ஆனால் கொலை செய்த அந்த மர்மநபர்கள் ஐந்துபேர் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 3 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ள சம்பவம் பொது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூக்கு, கண்களில் கசிந்த ரத்தம்... ஏர்வாடி இரட்டை மரணத்தில் ‘திடுக்’ திருப்பம்... போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!