சென்னையில் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்தில் மிகவும் அத்தியாவசிய சேவையை புறநகர் ரயில்கள் வழங்கி வருகின்றன. நாள்தோறும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகள் செல்வோருக்கு புறநகர் ரயில்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன. குறைந்த கட்டணத்தில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளுக்கு பயணிக்கலாம். இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை இன்று காலை முதல் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி விசாரிக்கையில் தாம்பரம் அருகே சிக்னலில் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில்களை இயக்கினால் விபத்துகள் ஏற்படும் என்பதால் புறநகர் ரயில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிக்னலை கோளாறை சரிசெய்யும் பணிகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.
மேலும் ரயில் சேவை பாதிப்பை சமாளிக்கும் வகையில் தாம்பரத்தில் இருந்து கூடுதலாக புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய மெகா மோசடி... ரூ.70,000 கோடி அபேஸ்... பிரியாணி ஓட்டல்களின் ஊழல் அம்பலம்...!
வழக்கமாக பல்வேறு பகுதிகளில் இருந்து தாம்பரம் வந்து, அங்கிருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் ரயில்கள் மூலம் பயணிப்பர். முன்னதாக பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!