மகேஷி தர்மாதிகாரி என்ற 57 வயதான இவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். சிபிஎஸ்சினுடைய மண்டல இயக்குனராக சென்னைக்கு சமீபத்தில் பணிமாறுதலாகி வந்திருந்துள்ளார். சென்னை அண்ணா நகரில் ஐ பிளாக் பகுதியில வாடகை வீடு எடுத்து தங்கி இருந்த நிலையில், அவர் உள்புறம் தாழிட்ட வீட்டிற்குள் இருந்து வெளியே வராமல் இருந்தது அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது.
இதுதொடர்பாக அவருடைய கார் ஓட்டுநனர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்திருக்கிறார்கள். அப்போது வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் அவர் தரையில் இறந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
அவருடைய உடல் மீட்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீசார் திருமங்கலம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதலை நேரில் பார்த்தவர்கள் எப்படி அவர் விழுந்து கிடந்தார், உடல்நலம் இல்லாமல் உயிரிழந்திருக்கிறாரா அல்லது வேறு விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!
இவர் சமீபத்தில் தான் வந்து கேரளாவிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். ஜூலை மாதம் ஏழாம் தேதிதான் வந்து இவர் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். இங்க திருமங்கலத்தில் இருக்கக்கூடிய சிபிஎஸ்இ அலுவலகத்தில் இவருடைய அலுவலகம் மண்டல இயக்குனருக்கான அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திலே பணிபுரிந்து வந்தவர் அண்ணாநகரிலே தங்கி இருந்திருக்கிறார். இவரது மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!