தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக ஓய்வூதியம் இலவச பட்டா மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் மொரட்டு பாளையம் ஊராட்சியில் சப்பட்டநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள சமுதாய நல கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் காலை முதல் உணவு தேநீர் என தடபுடல் விருந்து நடைபெற்றது. ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் சார்பில் ஊத்துக்குளி பகுதியில் நடைபெறும் அனைத்து உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் உணவு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் மொரட்டு பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 கடா, 150 கிலோ சிக்கன், 2500 முட்டைகள் உடன் தடபுடலான விருந்து வைக்தப்பட்டது.
இதில் காலை நேரத்தில் உள்ளே வந்தவர்களுக்கு சுடச்சுட இட்லி குடல் வறுவல் காலை உணவாக வழங்கப்பட்டது மதிய வேளையில் சாப்பாடு மட்டன் குழம்பு சிக்கன் சிந்தாமணி வறுவல், அவிச்ச முட்டை என மொரட்டு விருந்து பரிமாறப்பட்டது. மேலும் இடைவிடாது தேனீரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மனு அளிக்க வந்த பொதுமக்தளுடம் ஆர்வமுடன் வரிசையில் நின்று அசைவ விருந்தை விரும்பி சுவைத்தனர்.
இதையும் படிங்க: டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!