சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மீது லேசர் ஒலியை அடித்து இடையூறு செய்வது தொடர்கதையாகியுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக இதுபோல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்று அதிகாலை புனேவிலிருந்து சென்னைக்கு 178 பயணிகளுடன் வந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அந்த விமானமானது கிண்டி பகுதியில் தாழ்வாக படிப்படியாக குறைந்து தரையிறங்க முற்பட்டபோது லேசர் ஒலி விமானத்தின் முன் பகுதியில் பாய்ச்சப்பட்டது. இதனால் நிலைகுலைந்த விமானி சில வினாடிகள் வானிலேயே விமானத்தை வட்டமடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்.. பாஜக மீது திருமா தாக்கு..!

மேலும் அப்போது வந்து சிவில் ஏவியேஷன் விமான போக்குவரத்து அலுவலகத்திற்கும் மற்றும் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஓடுபாதைக்கு அருகே வந்த விமானத்தை விமானி மிக, மிக பொறுமையாக தரையிறக்கினார். இதனால் பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர். ஆனால் இப்படி விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சப்படுவது கடந்த இரண்டு வாரத்தில் இது மூன்றாவது முறையாகும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இதேபோல் சம்பவம் நடைபெற்ற நிலையில், போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது இதேபோல் வந்து மூன்றாவது முறையாக அடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிண்டி மற்றும் நந்தம்பாக்கம் உள்ளிட்ட காவல் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை பிரதிபலித்த எம். பி.க்கள் குழு! கனிமொழிக்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு!