சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பயண நெரிசலை குறைக்கவும், பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டமாகும். இது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் சுமார் 118.9 கி.மீ நீளத்தில், 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் முதல் சிப்காட் (45.8 கி.மீ, 50 நிலையங்கள்), கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி (26.1 கி.மீ, 30 நிலையங்கள்), மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (47 கி.மீ, 48 நிலையங்கள்). இத்திட்டத்தின் மதிப்பு ரூ.63,246 கோடியாக மதிப்பிடப்பட்டு, 2027-இல் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. முடிந்தவுடன், சென்னையின் மெட்ரோ பிணையம் 173 கி.மீ ஆக விரிவடையும். 2020 நவம்பரில் தொடங்கிய இத்திட்டத்தில், பூவிருந்தவல்லி முதல் போரூர் வரையிலான 9.1 கி.மீ நீளமுள்ள வழித்தடத்தில் சோதனை ஓட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்தப் பகுதி 2025 இறுதிக்குள் பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 10 வருஷத்துல இத்தனை கோடி மக்களா..!! மெட்ரோ ரயிலின் ஷாக் ரிப்போர்ட்..!
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம்-4ல், 'மயில்' என பெயரிடப்பட்ட சுரங்க இயந்திரம், பனகல் பூங்காவிலிருந்து கோடம்பாக்கம் வரை சுமார் 2047 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை வெற்றிகரமாக அமைத்து, இன்று கோடம்பாக்கம் நிலையத்தை வந்தடைந்தது. 64% உயர்ந்த பாதைகளும், 36% சுரங்கப் பாதைகளும் இத்திட்டத்தில் அடங்கும்.
https://x.com/i/status/1947938267313373683
இப்பணி கடந்த 2024ம் ஆண்டு மே 2ம் தேதி அன்று தொடங்கப்பட்டு, சுமார் 14 மாதங்களில் நிறைவடைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தின் மிக நீளமான பிரிவுகளில் ஒன்றாகும். 'மயில்' இயந்திரம், குடியிருப்பு பகுதிகள், கோடம்பாக்கம் மேம்பாலம் உள்ளிட்ட சவாலான இடங்களையும், 190 கட்டிடங்கள் வழியாகவும், அதில் 50க்கும் மேற்பட்ட பழைய கட்டிடங்களைக் கடந்து, செயலில் உள்ள ரயில் பாதைக்கு இணையாக சுரங்கம் தோண்டியது.
இதற்கு மேம்பட்ட தொழில்நுட்பமும், துல்லியமான பொறியியல் திறனும் தேவைப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 118.9 கி.மீ நீளமுள்ள மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்டத் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. பூவிருந்தவல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை 26.8 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில், 10.3 கி.மீ சுரங்கப்பாதையாக அமைகிறது. இதன் மூலம் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, விரைவான பயண வசதியை வழங்குவதை மெட்ரோ நிர்வாகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்வு சென்னை மெட்ரோவின் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA), ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) உள்ளிட்டவை இதற்கு நிதியுதவி வழங்குகின்றன. மத்திய அரசு 65% நிதியை வழங்குவதுடன், மாநில அரசு ரூ.22,228 கோடி பங்களிக்கிறது. இந்தத் திட்டம் சென்னையின் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைத்து, சோழிங்கநல்லூர் போன்ற ஐ.டி மையங்களுக்கு இணைப்பை மேம்படுத்தும். பயண நேரத்தைக் குறைப்பதுடன், போக்குவரத்து நெரிசலைத் தணித்து, சுற்றுச்சூழல் நன்மைகளையும் இத்திட்டம் வழங்கும். 2026 முதல் 2030 வரை படிப்படியாக முடிவடையும் இந்தத் திட்டம், சென்னையின் நகர்ப்புற இயக்கத்தை புரட்சிகரமாக மாற்றும்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 10 வருஷத்துல இத்தனை கோடி மக்களா..!! மெட்ரோ ரயிலின் ஷாக் ரிப்போர்ட்..!