எல்லாம் ஒரு அளவிற்கு தான் சார்.. என்று சிந்திக்க வைக்கும் வகையில் சென்னையில் ஒரு அற்ப சம்பவம் ஒன்று ரங்கேறியுள்ளது. சென்னையில் செல்லமாக வளர்த்த பூனையை காணவில்லை என உரிமையாளரின் புகாரை பரிசீலித்த போலீசார் பூனையை தேடி வருகின்றனர். பொதுவாக ஒருவர் காவல் நிலையத்திற்கு நகை பொருட்கள் பணம் இப்படி மதிப்பு மிக்க பொருட்களை காணும் என்று புகார் அளித்து பார்த்திருப்போம். ஆனால் தற்போது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒருவர். மேலும் இந்த சம்பவத்திற்கு சென்னை காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன மேலும் அவர்களின் விசாரணை உள்ளிட்டவைகள் கேட்போரை சூசகம் அடையச்செய்துள்ளது.

சென்னை அடுத்த அமைந்தகரை மாங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீலேஷ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆசை ஆசையாக பூனை ஒன்றை தனது செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளார். ஏன் இன்னும் சொல்ல போனால் அந்த பூனையை வீட்டில் ஒரு மனிதர் போல் வளர்த்து வந்துள்ளார். ஸ்ரீலேஷ் வீட்டில் செல்லமாக பூனை மற்றும் இன்றி நாய் போன்ற பல பிராணிகளை வளர்த்து வருகிறார். மேலும் அவர் சூளைமேட்டில் போட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். திடீரென கடந்த 17ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பூனை ஒன்று காணாமல் போகியுள்ளது.
இதையும் படிங்க: அவர்கள் விரலை எடுத்தே திமுகவினர் கண்ணை குத்தும் அண்ணாமலை... தமிழ்த்தாய் வாழ்த்து எங்கே என விளாசல்..!

எங்க தேடியும் கிடைக்காததால் முதலில் ஸ்ரீலேஷ் ப்ளூ கிராஸ் அமைப்பை நாடியுள்ளார். புகாரை ஏற்றுக் கொண்ட ப்ளூ கிராஸ் அமைப்பினர் பூனை குறித்த விவரங்களை பெற்ற பின் பூனையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ப்ளூ கிராஸ் அமைப்பினர் காலம் தாழ்த்துவதாக கருத்திய ஸ்ரீலேஷ் அமைந்தகரை போலீசாரிடம் சென்றுள்ளார். அங்கு ஸ்ரீலேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் புகாரை ஏற்ற அமைந்தகரை காவல் துறையினர், பூனையின் அங்க அடையாளங்களை பெற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தி வெளியானதை அடுத்து திருடர்கள் பணம் இப்படி எதை எதையோ தேடிய காவலர்கள் தற்போது பூனையை தேடி வருகின்றனர் என்று அப்பகுதி மக்களிடையே கேலிக்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு..!