பல்லாவரம் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் எட்டு நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நபர்களில் ஒருவர் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், இவர் மீது பல கொலை வழக்குகளும் அதன் தொடர்புடைய வழக்குகளும் இருந்து வந்தது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் ஒரே இடத்தில் தங்காமல் மணலி பகுதிகளில் சில நாட்களாக தங்கிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த திருசூலம் பகுதியில் மணி என்பவருடைய குடிசை வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். அவருடன் 17 வயது உடைய ஒரு சிறுவனும் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தூங்கிக் கொண்டிருந்த பொழுது சம்பவ இடத்திற்கு 8க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக வெட்டுக்கத்தியால் இருவரையும் வெட்டி சம்பவ இடத்தில் கொலை செய்துள்ளனர். விரல் விரல் போன்ற உறுப்புகள் தனித்தனியாக சிதறி சென்றுள்ளது. இந்நிலையில் பல்லாவரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இரண்டு பேர் மீதும் ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், முன் விரோதம் காரணமாகதான் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஒரு மாத காலமாக இந்த குடிசை வீட்டில் நான்கு பேர், ஐந்து பேர் என அடிக்கடி கும்பல் கும்பலாக வந்து தங்கி போதை பொருட்களை பயன்படுத்தி வந்த நிலையில், நேற்று இந்த இரண்டு நபர்கள் மட்டும் இருந்து உள்ளனர். இதில் ஒருவரின் முகம் முற்றிலுமாக சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மீது செங்கோடு சத்திரம் பகுதியில் ஆல்பர்ட் என்பவரை கொலை செய்த வழக்கும், தீர்க்காங்கலை பகுதியில் அடித்தடி வழக்கும், பெருங்களத்தூர் பகுதியில் தீபக் என்பவரின் வீட்டை அடித்து உடைத்த வழக்கு போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய மடப்புரம் அஜித் கொலை வழக்கு... நகை திருட்டு புகாரை முடிக்க நிகிதா சம்மதம்..!!
இதுதொடர்புடைய நபர்கள் தான் இவர்களை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தற்பொழுது இந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவ இடத்தில் தற்பொழுது தடயவியல் நிபுணர்கள் தடையங்களை சேகரித்து வருகின்றனர். அதிகாலையில் இந்த வீடுகள் அதிகமாக இருந்த பகுதியில் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி சாலை வழியாக இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ரயில்வே தண்டவாள பகுதிகள் போன்றவற்றையும் தற்போது காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு நபர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த குற்றப்பின்னணி இவர்கள் மீது முடிச்சூர் பகுதியிலும், தாம்பரம் பகுதிகளிலும் பல அடித்தடி வழக்குகள் உள்ளது. எனவே அனைத்து குற்ற சம்பவங்களையும் ஒன்றிணைத்து கிட்டத்தட்ட நான்கு காவல் நிலையங்களில் உள்ள கோப்புகளையும் எடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது எப்படி? என்பது குறித்து தற்பொழுது தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லாக்கப் டெத்... சூடுபிடிக்கும் மடப்புரம் அஜித் கொலை வழக்கு... நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்..!!