கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தின் பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமியை தரிசனம் செய்து ராமராயர் மண்டகப்படி தீர்த்தவாரி என்று அழைக்கப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வைபவம் நடைபெறும். இது கள்ளழகரை குளிர்விக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்க முன்பு ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டு சிறிய குழாய் மூலம் தண்ணீர் சுவாமியை நோக்கி பீய்ச்சி அடிப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏர் பிரஷர் பம்பு மூலமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் 5.58 மணிக்கு வைகை ஆற்றில் எழுந்தருளினார். கள்ளழகர் பச்சை பட்டூடுத்தி, ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளினார். கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வெட்டி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் சர்க்கரை தீபங்கள் ஏற்றி கள்ளழகரை வரவேற்றனர்.லட்சக்கணக்கான மக்களின் கோவிந்தோ... கோவிந்தோ... எனும் பக்தி கோஷத்துடன் கள்ளழகரை வழிப்பட்டனர்.
இதையும் படிங்க: போர் நிறுத்த அறிவிப்பை ட்ரம்ப் ஏன் வெளியிடணும்.? புரியாத புதிரா இருக்கே.. கேள்வி எழுப்பும் திருமாவளவன்!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தின் பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமியை தரிசனம் செய்து ராமராயர் மண்டகப்படி தீர்த்தவாரி என்று அழைக்கப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வைபவம் நடைபெறும். இது கள்ளழகரை குளிர்விக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்க முன்பு ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டு சிறிய குழாய் மூலம் தண்ணீர் சுவாமியை நோக்கி பீய்ச்சி அடிப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏர் பிரஷர் பம்பு மூலமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால், கடந்த ஆண்டும் பக்தர்கள் பலர் அந்தத் தடை செய்யப்பட்ட பம்பை பயன்படுத்தினர்.
இதையும் படிங்க: அப்பன்கள் தீவிரவாதிகள்.. மகன்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் பொறுப்புகளில்.. வெளங்குமா இது.?