சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதி அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாலை நேரிலேயே சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக பொதுச் செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் (பிப்ரவரி 10) துரைமுருகன் வீட்டில் இருந்தபோது தவறி விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் துரைமுருகன்?! காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போவது யார்? திமுகவில் திருப்பம்!
தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிகாலையிலேயே அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கு முன்பாகவும், கடந்த ஆண்டின் இறுதியில் உடல்நலக் குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீப காலமாக வயதுமூப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால், அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: தாறுமாறாக லத்தியால் தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!