டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ல் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை தமிழ்நாட்டின் சார்பாகவும் தமிழ்நாடு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும் முன்வைத்தார். ஏற்கனவே பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டதாகவும், இன்று மாலை 4 மணிக்கு அந்த சந்திப்பானது நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகின.

அதன்படி, இன்று மாலை பிரதமரை நேரடியாக சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திபின் போது, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவையில் இருக்கக்கூடிய மத்திய அரசினுடைய நிதி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் மற்றும் மத்திய அரசினுடைய நிதிகள் அதாவது திட்டங்கள் சார்பாகவும் ஒரு ஆலோசனையை இந்த சந்திப்பின் பொழுது அவர்கள் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கல்வி நிதி என்பது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் போராடி இந்த நிதியை பெற வேண்டியதுள்ளது என்ற ஒரு கட்டாயமானது மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த போக்கை கைவிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தற்பொழுது பிரதமரிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமக்கிர சிக்ஷா திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 2,200 கோடி ரூபாய்க்கும் அதிகமான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இந்த சந்திப்பின் பொழுது அவர் முன்வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் சென்னை மெட்ரோ திட்டத்திற்கான இரண்டாம் கட்ட நிதி என்பது இன்னும் ஒதுக்கப்படாமல் விடுவிக்கப்படாமல் இருக்கும் நிலையில், அதற்கான ஒரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என இந்த சந்திப்பின் பொழுது பிரதமரிடத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ் மகனை காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி? அந்தர் பல்டி அடித்த ஜெயக்குமார்..!
அதற்கு அடுத்தபடியாக 15வது நிதி கமிஷனுடைய பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அந்த ஒரு நிதி பகிர்வு என்பதை 50% வரை உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை பிரதமருடனான சந்திப்பின் பொழுது அவர் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் தலைமையில் கூடியது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் அதிருப்தி!!