ஒட்டன்சத்திரம், பழனி மக்களின் குடிநீர் தேவைக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது- அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுபாடு இருக்காது- காவிரி குடிநீர் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் முதலமைச்சர் துவக்கி வைப்பார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
பழனி அருகே அமர பூண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் துவக்கி வைத்தார். முகாமில் பட்டா மாறுதல், ஆதார் அட்டை திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 46 சேவைகளுக்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பெரும்பாலான மனுக்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
பின்னர் புதிய குடும்ப அட்டை ,மகளிர் சுய உதவிக் குழுக்கடன் , மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முடிக்கப்படும், காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைக்கப்பார்.
இதையும் படிங்க: ரூபாய் நோட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து!! கையில தொட்டா கதை முடிஞ்சுது!! உஷாரய்யா உஷாரு
இதன் மூலம் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட 45 ஊராட்சிகளில் குடிநீர் தேவை பூர்த்தியடையும் என அமைச்சர் சக்கரபாணி பொதுமக்களிடம் தெரிவித்தார். இந்த கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்த அமைச்சர் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் உணவுத்துறை மூலம் 20 இலட்சம் பேருக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக பகுதிநேர ரேசன் கடைகள் 3000 கடைகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 கடைகள் பிரித்து கொடுத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி மக்களிடத்தில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: உங்க விஜய் நான் வரேன்.. 2026 நம்ம தான்! தொண்டர்கள் மத்தியில் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு..!