தமிழகத்தின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1974 ஜூன் 22 அன்று சென்னையில் பிறந்த விஜய், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாகவும், "தளபதி" என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவராகவும் இருந்தவர். அவரது அரசியல் பயணம் மிக வேகமாக இருந்தது.
2024 பிப்ரவரியில் தவெகவைத் தொடங்கிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிகரமாக முன்னிறுத்தி, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இது அவரது முதல் பிறந்தநாள் என்பதால், தமிழ்நாடு முழுவதும் இந்த நாள் சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மயிலாப்பூரில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் வெங்கட்ரமணனின் சொந்த தொகுதியான மயிலாப்பூரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. மந்தவெளியில் உள்ள சத்தியவாணி முத்து நகர் 124 வது வட்டம் சார்பாக விஜய் ரசிகர் மன்றம், இளைஞர் அணி தொண்டர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: "தினமும் 2 விவசாயிகள் தற்கொலை"..! பயிர்க்கடன் தள்ளுபடி அவசியம்... சவுமியா அன்புமணி வலியுறுத்தல்..!!
மேலும் அருள்மிகு துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் தளபதி விஜய் அவர்கள் பூரண உடல் நலத்துடன் நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்று சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு, நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை முன்னெடுக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால் அவரது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் ட்ரீட்டாகவே அமைந்துவிட்டது.
இதையும் படிங்க: " தமிழக வளர்ச்சிக்காக உங்களுடன்"..! முதல்வர் விஜய்க்கு ராகுல்காந்தி, EPS, சீமான் பிறந்தநாள் வாழ்த்து..!!