• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.134.83 கோடி... விவசாயிகளுக்கு இனி நோ டென்ஷன்... தமிழகமே எதிர்பார்த்த சிறப்பு திட்டத்தை அறிவித்தார் முதல்வர் விஜய்...!

    134.83 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். 
    Author By Amaravathi Fri, 12 Jun 2026 10:22:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay special announcement for Farmers

    "குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026"

    தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு
    32.07 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதில், கார் / குறுவை / சொர்ணவாரிப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.48 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 
    தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (பகுதி), திருச்சி (பகுதி), அரியலூர் (பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜுன் 12-ஆம் நாளன்று திறப்பது வழக்கமாகும். இந்நிலையில், நடப்பு தென்மேற்குப் பருவத்தில் 'எல்நினோ' எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி (நீர் இருப்பு: 41.52 டிஎம்சி) மட்டுமே உள்ளது. எனவே, இன்று (ஜுன் 12) மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது.

    இதையும் படிங்க: சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (Filter Points) மூலம் 3.55 இலட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப்பொழிவு சீராக இல்லாத நிலையிலும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கார் / குறுவை / சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார்கள்.

    இதன்படி, வடிமுனைக் மாவட்டங்களில் குறுவை குழாய்களைக் கொண்டு டெல்டா சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 57.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் என மொத்தம் 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத் செயல்படுத்தப்படும்.

    திட்டம் இத்திட்டத்தில், நெல் இயந்திர நடவு / நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு 134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 

    இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும். டெல்டா மேலும், வேளாண் பொறியியல் துறை வாயிலாக மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளன. 

    மேலும், நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன. மேலும், குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 இலட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    மேலும் படிங்க
    என் சாபம் பளிச்சிடிச்சி.. முத்து மீனாவை கடுப்பாக்கிய விஜயா..!! கதறி கதறி அழும் ரோஹினி.. சிறகடிக்க ஆசையில்..!

    என் சாபம் பளிச்சிடிச்சி.. முத்து மீனாவை கடுப்பாக்கிய விஜயா..!! கதறி கதறி அழும் ரோஹினி.. சிறகடிக்க ஆசையில்..!

    சினிமா
    இனி 45 நிமிடங்கள் ஓய்வு... பள்ளி மாணவர்களுக்கு மெகா குட்நியூஸ் சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...!

    இனி 45 நிமிடங்கள் ஓய்வு... பள்ளி மாணவர்களுக்கு மெகா குட்நியூஸ் சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...!

    தமிழ்நாடு
    ஈரான் - அமெரிக்கா போர்! குட் நியூஸ் சொன்னார் ட்ரம்ப்! இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?!

    ஈரான் - அமெரிக்கா போர்! குட் நியூஸ் சொன்னார் ட்ரம்ப்! இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?!

    உலகம்
    அமரன் நினைவிருக்கா!! மேஜர் முகுந்த் வரதராஜன் கவுரவிப்பு! தாம்பரம் - வேளச்சேரிக்கு அவரது பெயர் சூட்ட தீர்மானம்!

    அமரன் நினைவிருக்கா!! மேஜர் முகுந்த் வரதராஜன் கவுரவிப்பு! தாம்பரம் - வேளச்சேரிக்கு அவரது பெயர் சூட்ட தீர்மானம்!

    தமிழ்நாடு
    தவெகவிற்கு கிரீன் சிக்னல்... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொன்ன ராகவா லாரன்ஸ்...இதை கவனிச்சீங்களா?

    தவெகவிற்கு கிரீன் சிக்னல்... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொன்ன ராகவா லாரன்ஸ்...இதை கவனிச்சீங்களா?

    அரசியல்
    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் கன்ஃபார்ம்?! தென்கொரியாவில் அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் கன்ஃபார்ம்?! தென்கொரியாவில் அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா!

    அரசியல்

    செய்திகள்

    கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! கோழிக்கோட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி! கண்காணிப்பு தீவிரம்!

    கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! கோழிக்கோட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி! கண்காணிப்பு தீவிரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share