திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கும் நிலையில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி.ஜோசப் விஜய் இன்று தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா பதவி விலகி தவெகவில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் ஏற்பட்டது.
தவெக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல்வரின் இந்த பிரச்சாரம் அமைந்தது. பிரச்சார மேடைக்கு வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரச்சார மேடையில் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமாவை கை கொடுத்து முதல்வர் விஜய் வரவேற்றார்.

தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் முதல்வர் விஜய் உரையாற்றினார். என் நெஞ்சில் குடியிருக்கும் திருப்பூர் தொகுதி மக்களே என்று கூறி பேச தொடங்கினார். கொங்கு மண்டல தங்கங்களே, சிங்கங்களே என்று புகழ்ந்தார். தமிழக வெற்றி கடகம் ஆட்சி அமைத்ததில் இருந்து ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்து முதல்வர் விஜய் உரையாற்றினார். முதலமைச்சராக வரவில்லை உங்கள் வீட்டு மகனாக தாய் மாமனாக உங்கள் விஜய்யாக இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பூர் அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் 13 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் மகளிர்கான வெற்றிப் பயணத்திட்டம் அக்டோபர் இரண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அசிங்கமா பேசுறாங்க...! EPS தலைமை பிடிக்காமல் தான் வந்தேன்.. மேடையிலேயே அழுத சத்தியபாமா... ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!
பால் கொள்முதல் லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார். தமிழக வெற்றிக்கழக ஆட்சி பொறுப்பேற்றதும் ஒரு லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்ற பிறகு திருப்பூர் மாவட்டத்தில் நிறைவேற்றிய திட்டங்களையும் முதல்வர் விஜய் பட்டியலிட்டார். திருமூர்த்தி அணை பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவர பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது என்றும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விதைகளை சேமிக்கும் மையத்தை மடக்குளத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தாராபுரம் தொகுதியில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தெறிக்கும் தாராபுரம்... கோவைக்கு சென்ற முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!