மேற்காசியாவில் நிலவி வரும் ஈரான் - இஸ்ரேல் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள எல்பிஜி தட்டுப்பாடு, தற்போது கல்வித் துறையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரி, கேஸ் தட்டுப்பாடு காரணமாகத் தனது விடுதி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், போதிய சமையல் எரிவாயு கையிருப்பு இல்லாத காரணத்தால் விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் விடுதி வசதி தற்காலிகமாகச் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகக் கல்லூரி நிர்வாகம் கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்துள்ளது.
இதையும் படிங்க: பெங்களூரில் கேஸ் தட்டுப்பாடு..!! தவிக்கும் PG-கள்..!! ஒரு வாரம் தான் சமாளிக்க முடியுமாம்..!!
மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை நடைபெறவிருந்த CIA-II தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். மாணவர்கள் கல்லூரிக்கு வரத் தேவையில்லை; தேர்வுகள் அனைத்தும் இணையவழியில் நடத்தப்படும். இந்த ஆன்லைன் தேர்வு முறை விடுதி மாணவர்கள் மற்றும் உள்ளூர் மாணவர்கள் என அனைவருக்கும் பொதுவானது.
மக்களவையில் பிரதமர் மோடி இன்று எரிபொருள் சேமிப்பு குறித்து உரையாற்றிய நிலையில், கள யதார்த்தத்தில் உணவகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தட்டுப்பாட்டைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. கோவையில் ஏற்கனவே சில உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது கல்லூரி விடுதிகள் மூடப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!