திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூக்கொல்லையைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவர் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். நேற்றிரவு முத்துக்கிருஷ்ணன் தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பும் போது அவரது பக்கத்துவீட்டைச் சேர்ந்த நெய் கிருஷ்ணன் என்பவர் வளர்த்து வரும் நாய் அவரைப் பார்த்து குரைத்துள்ளது.

இதனால் கோபமடைந்த முத்துக்கிருஷ்ணன் நாயின் உரிமையாளரையும், நாயையும் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த இரு வீட்டாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நாய் விவகாரத்தில் இரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்திற்கு மேல் வாக்குவாதம், கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நெய் கிருஷ்ணன் இரும்பு ராடால் முத்துக்கிருஷ்ணனை தாக்கியுள்ளார். பதிலுக்கு முத்துக்கிருஷ்ணனும் நெய் கிருஷ்ணனைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருப்பதியில் தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி ..முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென திறக்கப்பட்ட கேட் ..ஆட்சியர் அதிர்ச்சி பேட்டி ..!
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்துக்கிருஷ்ணன் தலையில் பலத்த காயம் அடைந்ததை தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: கிரைம் சீரியலை" பார்த்து வினோத முயற்சி: 'மிரட்டல் கடித' எழுத்துப் பிழையால் சிக்கிய 'நாடகக் கடத்தல் இளைஞர்'