கோவை விமான நிலையம் அருகே ஆ நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மூன்று இளைஞர்களை கூட்டு பாதை உன் கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கொதிநிலை அடங்காத நிலையில், இருகூர் பகுதியில் சேர்ந்த 25 வயது இளம்பெண்கள் மர்ம நபர்கள் கடத்திச் சென்று பார்க்க பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கோவை இருகூர் பகுதியில் இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. காரில் இருந்து அந்தப் பெண் அலறல் சத்தம் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவியை மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தமிழக - கேரளா எல்லையான வாளையார் பகுதியில் இளம்பெண்ணை மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் ரேஸ்கோஸ்ட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரியின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆபத்தான அசுர வேகம்... மரத்தில் மோதி சுக்குநூறான கார்... உடல் நசுங்கி 4 இளைஞர்கள் பலி...!
இதை அடுத்து நேற்று இரவு இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த பெண் ஒருவரை வெள்ளை நிற காரில் வந்த நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி சென்றதை அங்கு இருந்தவர்கள் பார்த்து உள்ளனர்.
இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பெண் கடத்தப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? யார் அந்த இளம் ? அந்தக் கார் எங்கு சென்றது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரம்..!! அடுத்த முக்கியப்புள்ளி நீக்கம்..!! இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!