தமிழகத்தில் நாய் கடி ரேபிஸ் தொற்று ஏற்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் துயர சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வீட்டை விட்டு வெளியே சென்றாலே தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் பிள்ளைகளை விளையாட கூட வெளியே அனுப்ப பெற்றோர்கள் அஞ்சு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஐயப்பன். கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இதேபோல் அருகில் உள்ள ஊருக்கு வேலைக்குச் சென்ற போது, வெறி நாய் ஒன்று அவரைக் கடித்துள்ளது.
ஆனால் நாய் கடியை ஐயப்பன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐயப்பனுக்கு தொடர்ந்து உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு "டாடா " காட்டப் போகிறாரா எடப்பாடி?... ராஜேந்திர பாலாஜி சூசக பேச்சால் சர்ச்சை...!
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே, கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ரேபிஸ் தோற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்ட அரசாங்க தலைமை மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தார்.
ஈரோடு வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்பு வளர்ப்பு நாய் கடித்ததாக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வீட்டில் வளர்த்து வந்த நாயை தெரு நாய்கள் கடித்துள்ளது. அந்த வளர்ப்பு நாயானது ரமேஷை கடித்த நிலையில், அவர் கோவை அரசு மருத்துவமனையில் பிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷுக்கு ராபிஸ் தொற்று இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து ரமேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: முதுகில் குத்திய அதிமுக நிர்வாகிகள்... விஜயபிரபாகரன் தோல்விக்கு காரணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்து கே.டி.ஆர்...!