கோவை பேரூரில் அமைந்து உள்ளது பட்டீஸ்வரர் கோவில், தரிசன நேரம் முடிந்து பூஜைகள் முடிந்த பிறகு கதவுகளை சாற்றி பின்னர் மறுநாள் காலை பூஜைக்கு பின்னர் கதவுகள் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இரவு பக்தர்கள் அனைவரும் சென்ற பிறகு கோவில் பூஜைகள் முடிந்து கருவறை மூடப்பட்டது. பின்னர் நடை சாத்தப்பட்டு இருந்தது. அப்பொழுது அங்கு ஒரு வி.ஐ.பி சென்று உள்ளார். சாத்தப்பட்ட கதவுகளை பாதி திறந்த நிலையில், உள்ளே சென்று பூட்டப்பட்ட கருவறை திறந்து மீண்டும் அவர் மட்டும் அங்கு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதனை பார்த்த அங்கு இருந்த நபர் ஒருவர் உள்ளே சென்று, கருவறையை பூட்டிய பிறகு எப்படி அவருக்கு மட்டும் அனுமதி அளித்து சாமி தரிசனம் செய்ய வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார். அவர் யாராக ? இருந்தாலும் பூட்டிய நடையை எதற்கு திறந்தீர்கள் ? உள்ளே எப்படி அனுமதித்தீர்கள்?, நாள்தோறும் வரும் பக்தர்கள் யாராவது வந்தால் அனுமதிப்பீர்களா ? யார் அவர் ? எந்த அதிகாரியாக இருந்தாலும் சாமியிடம் என்ன அதிகாரி ? இது என்ன விதி ? கோயில் சாத்திய பிறகு உங்களுக்கு யார் ? அனுமதி கொடுத்தார் என கேள்வி எழுப்பியதோடு, வீடியோவும் எடுத்துள்ளார்.
தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆகம விதிகளை மீறி, கோவில் நடை சாத்திய பிறகும், தனிநபர் தரிசனத்திற்காக கோவிலை திறந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அறநிலையத்துறை ஆணையாளருக்கு இந்து முன்னணி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து நடை சாத்திய பிறகு அரசு அதிகாரியை சாமி தரிசனம் செய்ய வைத்த பேரூர் கோவில் எலக்ட்ரிசியன் வேல்முருகன், குருக்கள் சாமிநாதன் ஆகியோர் நேற்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மருதமலை தக்கார் செந்தில் குமார் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஸ்டிக்கரில் கவனம் செலுத்தி செயலில் கோட்டை விட்ட திமுக! முதல்வர் மருந்தகத்தை விமர்சித்த நயினார்...
இதனையடுத்து கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன்களை கோவில் நுழைவு வாயில் அருகில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொண்டு செல்லலாம் என்றும், தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் பொழுது டோக்கன்களை கொடுத்துவிட்டு செல்போன்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்போனை கொடுத்தும், வாங்கியும் பக்தர்கள் செல்கின்றனர்.
இதையும் படிங்க: முற்றுப்பெறும் நாடாளுமன்ற கர்ஜனை! ஓய்வு பெறுகிறதா பாராளுமன்ற புயல்?...