அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிறுநீரக விற்பனை பிரச்சனை திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம். சாதாரணமாக நடக்கின்ற சம்பவம் வேறு. அதைத்தான் நான் குறிப்பிட்டு கூறினேன். ஒரு உடல் உறுப்பை எடுக்கிறார்கள் என்றால் என்ன பொருள் முறைகேடு கிடையாது திருடுவதுதான் அர்த்தம். உடல் உறுப்புகளை கூட திருடுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம். அதுவும் யார் திருடுகிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் சாதாரண மக்களாக இருந்தால் பரவாயில்லை. அதில் அதிகமாக நான் உள்ளே செல்ல விரும்பவில்லை.
பத்திரிகையில் வெளிவந்த செய்தி அரசாங்கம் வெளியிட்ட செய்தி அரசாங்கமே ஒரு குழு போட்டு ஒரு ஐஏஎஸ் மருத்துவத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் சென்று விசாரிக்கும் போது அந்த விசாரணையில் வந்த செய்தியை தான் நான் கூறுகின்றேன். இப்படிப்பட்ட சம்பவம் மிக மிக மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்கும் ஏழை எளியவர்கள் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் வறுமையை பயன்படுத்தி இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பது உண்மையாக வருத்தத்திற்கும் வேதனைக்குரியது.
தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது முதலமைச்சரும் அவரது சகாக்களும் எங்கே நடக்கிறது என்று கேள்வி கேட்டு வேண்டுமென்று திட்டமிட்டு தவறான தகவலை எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார் என்று சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: விசிக, தவெகவை கூட்டணிக்கு வாங்க, வாங்கன்னு கூப்பிட்டேனா? - பொறிந்து தள்ளிய எடப்பாடி பழனிசாமி...!
பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வரும் செய்தியை தான் நான் கூறுகின்றேன். தனியாக எந்த செய்தியும் கிடைக்கப் போவதில்லை. அரசாங்கத்திற்கு எல்லா செய்தியும் கிடைக்கும். பத்திரிகைகளும் ஊடகங்களும் வெளிப்படுத்தும் செய்தியை தான் நான் கூறுகின்றேன். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை பின்னாடியே சென்ற வாலிபர் அலக்காக தூக்கி விட்டு சென்று விட்டார். இது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இது இந்த அரசின் கவனத்திற்கு எடுத்துச் சொன்னால் வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எங்கள் அரசு மீது பணி சுமத்துகிறார் என்று கூறுகின்றனர். எதிர்க்கட்சியின் வேலையை இதுதானே. நாட்டில் நடக்கின்ற பிரச்சனைகளை எடுத்துக் கூறுவது தான் எதிர்க்கட்சியான எங்களின் கடமை. அதை சரி செய்வது இந்த ஆட்சியின் கடமை. ஆனால் ஆட்சியாளர்கள் அதை தட்டி கழிக்கின்றனர். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் 2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற போது மக்கள் தகுந்த பதில் கொடுப்பார்கள்.
தற்போது நாங்கள் பொதுமக்களை சந்திக்க போவது உறுப்பினர் சேர்க்கை கிடையாது. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை கொடுத்து அதில் மதிப்பெண் இடம் தான் சொல்கின்றோம். எங்களுக்கு ஏற்கனவே உறுப்பினர்களை எல்லாம் சேர்த்து முடிச்சாச்சு. இனி புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
இன்றைக்கு நேற்றைக்கு ஆரம்பிக்கப்பட்ட கட்சி திமுக அல்ல காலம் காலமாக உள்ள கட்சி. அந்த கட்சியில் உறுப்பினர்கள் சேரும்பொழுது தானாக பொதுமக்கள் வந்து ஆர்வமாக சேர வேண்டும் அதுதான் அனைத்து கட்சியின் வழக்கம் திமுகவிலும் அப்படி தான் நடைமுறையில் இருந்தது.
ஆனால் தற்பொழுது மக்களின் செல்வாக்கும் தொண்டர்களின் செல்வாக்கும் இல்லாததால் வீடு வீடாக சென்று கதவை தட்டி ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக ஓ டி பி பெற்று உறுப்பினர் சேர்ப்பது சரியா otp வாங்குவது நீதிமன்றம் வரை சென்று விட்டது.
நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறினால் தப்பு என்று சொல்கின்றனர் அதனால்தான் பொதுமக்களை நேரடியாக திமுக சொன்ன வாக்குறுதிகளில் சிலவற்றை கொடுத்து பொதுமக்களையே மதிப்பிட சொல்கின்றோம். மக்களே இதற்கு முடிவு சொல்லட்டும். மக்கள் தான் நீதிபதிகள் மக்கள் தான் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். விருப்பப்பட்டால் அதை பூர்த்தி செய்து மீண்டும் எங்களிடம் கொடுக்கட்டும் இல்லையென்றால் அவர்களை வைத்துக் கொள்ளட்டும். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
திமுக தலைவர்கள் என்னை எப்படி எல்லாம் பேசினார்கள்? அவர்களைப் பார்த்துதான் அரசியலில் கீழ் தரமான விமர்சனம் செய்வது குறித்து கேட்க வேண்டும். முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் என்னை எப்படி எல்லாம் கீழ்த்தரமாக பேசினார்கள். நான் அப்படி யாரையும் பேசவில்லை எந்த இடத்திலும் நான் மரியாதை குறைவாக பேசமாட்டேன்.
சில நேரத்தில் வேகமாக பேசுகின்ற பொழுது நீ நான் என்ற பேச்சுக்கள் வந்திருக்கும். அதைத் தவறு என்று எடுத்துக் கொண்டால் என்னை பற்றி என்னவெல்லாம் பேசினார்கள். ஒரு முதலமைச்சரை புழுவாக சென்றேன் என்று கூறினார்கள். ஊடகம் முன்பு அவர்களைப் போல் நான் நடந்து கொள்வது முறையல்ல. அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த முதல்வர் உதயநிதி? இபிஎஸ்-க்கு அமைச்சராக ரகுபதி பதிலடி!