சோபா வந்தவுடன் சிலர் நம்மை விட்டு சென்றுவிட்டார்கள் என்று எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது ஏற்கனவே திமுக கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் இப்படி பேச இருக்கக் கூடாது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் தற்பொழுது மக்கள் குறைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு வெறும் சமூக ஊடக விளம்பரங்களை மட்டுமே நம்பி ஒரு "ரீல்ஸ் அரசாங்கம்" நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆளுங்கட்சியின் தற்போதைய செயல்பாடுகளை மிகக் காட்டமாக விமரிசித்துப் பேசினார்.
மக்கள் செல்வாக்கைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள், களத்தில் இறங்கி வேலை செய்வதை விடுத்து வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதிலேயே தங்களது முழு நேரத்தையும் செலவிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி முதலமைச்சரைச் சந்திக்கச் செல்லும் நபர்கள் வரை அனைவரும் தங்களது சுய விளம்பரத்திற்காக வீடியோக்கள் எடுப்பதில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர, மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை என்று அவர் அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டார்.
இதையும் படிங்க: ஆதவ் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கனும்..! கரூர் கணக்கு... CPI வீரபாண்டியன் அறிவுரை..!!

தொடர்ந்து ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மையைக் கடுமையாகச் சாடிய அவர், தமிழகத்தில் உண்மையான மக்கள் நலப் பணிகளை ஆளுங்கட்சி செய்கிறதோ இல்லையோ, அவர்களை விட எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக மிகச் சிறந்த முறையில் மக்கள் பணிகளை முன்னெடுத்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஆளுங்கட்சியினர் விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே திளைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆனால் திமுக களத்தில் நின்று மக்களின் குறைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் கூறினார்.
'சிலர் சோஃபா வந்தவுடன் நம்மைவிட்டு சென்றுள்ளனர் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உதயநிதி பேசியது மிக பெரிய அரசியல் பிழை என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறு பேசியது உகந்தது அல்ல என்றும் சரியல்ல எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் திமுகவின் கூட்டணியில் இருந்து சிபிஐ கட்சி வெளியேறிய நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நேரடியாக அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "திடீரென முதல்வரை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்"..! விஜயிடம் பேசியது என்ன..? பரபரப்பு பேட்டி..!!