நிலக்கோட்டை பேரூராட்சியில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில், 38-கறிக்கடைகளுக்கு பொது ஏலம் நடத்தாமல் கொள்ளைப்புறமாக புதுப்பித்து தரும் முடிவை கைவிட்டு,அறிவித்தபடி பகிரங்க பொது ஏலம் நடத்தக்கோரி மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பேரூராட்சிகளில் ஒன்று,நகரில் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் தினசரி மற்றும் வார காய்கரிச்சந்தைகள்,மீன் மார்க்கெட் கறிக்கடைகள் என ஒருங்கே அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம்,
இதனால் இப்பகுதியில் கடைகள் நடத்த கடும் போட்டி நிழவுவது உண்டு.தற்போது மார்கெட்டில் உள்ள 38-கறிக்கடைகளும் கட்டப்பட்ட நாள் முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மிகக்குறைந்த வாடகைக்கு அவர்களுக்கே தொடர்ந்து ரினுவல் செய்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெனிசுலாவில் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு! 4,300 பேர் காயம்!! முழு வீச்சில் நடக்கும் மீட்புப்பணி!
இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வரும் 25.06.26 அன்று 1 முதல் 38 வரையிலான கறிக்கடைகள் பகிரங்க பொது ஏலம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர், இதனால் பல வியாபாரிகள் கறிக்கடைகளை ஏலம் எடுப்பதற்காக வைப்புத்தொகை காசோலை உள்ளிட்டவைகளை எடுத்து தயாராகயிருந்தனர். இதனையடுத்து திடீரென பேருராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் இரத்துசெய்யப்படுவதாகவும்,பழைய முறைப்படி மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கே ரினுவல் செய்து தர போவதாகவும் தகவல் வெளியானதை அடுத்து.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலக்கோட்டை ஒன்றியக்குழு சார்பில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை,தினசரி காய்கறி மார்கெட்டில் உள்ள 1-முதல் 38-வரை உள்ள கறிக்கடைகளை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் ஏற்கனவே உள்ள கடைக்காரர்களுக்கு மேலும் 3-ஆண்டுகளுக்கு கொள்ளைப்புரமாக புதுப்பித்து தரும் முடிவை கைவிட்டு வெளிப்படை தன்மையுடன் பகிரங்க பொது ஏலம் நடத்த வேண்டம், போராட தூண்டாதே என்ற வாசகத்துடன்
பஸ்நிலையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
இதையும் படிங்க: எ.வ.வேலு நல்ல ஆதாரத்தோடு சிக்கியிருக்கிறார்!! துணிச்சலோடு எதிர்கொள்ளட்டும்! அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!