மாநிலம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. லாரிகளில் குடிநீர் வழங்க வேண்டிய அரசு தண்ணீர் வழங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்க குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
மாநிலம் முழுவதும் பட்டா பிரச்சனை தீராமல் இருந்து வருகிறது. இதை தீர்க்க வேண்டும். சட்டமன்றத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி லிட்டருக்கு 44 ரூபாய் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், பால் விலை உயர்வை காரணம் காட்டி மாட்டுத்தீவன செயற்கையாக விலையை உயர்த்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். தீவனம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும்.
காய்கறி விலை, வெங்காய விலை உயர்வு, சர்க்கரை விலை 30 ரூபாய் உயர்வு, அரிசி கிலோ 80 ரூபாயாக உள்ளது. விலைவாசி திடீரென உயர்ந்துள்ளது. மக்கள் எப்படி வாழ்வது.?
இதையும் படிங்க: கை வைத்தால் கதை முடிந்தது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் பெ.சண்முகம் பகிரங்க எச்சரிக்கை...!
மின் துறை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது அவசியம், இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், சட்டமன்றத்தில் முதலமைச்சர், தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையம் 26 ஆயிரம் கோடியில் அமைக்க private partnership முறையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் தனியார் பங்களிப்பு என்ன என்ற விளக்கம் இல்லை. தனியார் பங்களிப்பு அதிகரித்தால் இது முழுக்க தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும். அனல் மின் நிலையங்கள் இயக்க நிலக்கரி பெறுவதில் சிக்கல் இருக்கும் போது, தனியார் கூட்டாண்மை மூலம் அனல்மின் நிலையம் அமைப்பது தேவையற்றது. காற்றாலை, நீர் மின் உற்பத்திக்கான மாற்று மின் திட்டங்களை அரசு உருவாக்கலாம்.
இதை 110 விதியில் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மானிய கோரிக்கையில் அறிவித்திருந்தால் உறுப்பினர்கள் அதனை எதிர்த்து விவாதித்திருப்பார்கள்.
எதை 110. விதியில் அறிவிப்பது என்பதில் இந்த அரசுக்கு தெளிவு வேண்டும்.
புதிய பாட திட்ட மாதிரியை வெளியிட்டு அரசு சார்பில் கருத்து கேட்டனர். ஆனால் இப்படி வெளியிட்டதே யாருக்கும் தெரியாது. இதற்கான காலம் முடிந்து விட்டது. இது உண்மையில் பொதுமக்கள் கருத்து கேட்பதா.? யாருக்கும் தெரியாமல் சம்பிரதாயமாக நடந்துள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கு கூட தெரியாது. இதனை சாதாரணமாக அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர். முறையாக அறிவித்து இன்னும் 15 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.
நாளை, நீட் எதிர்ப்பு மாணவி அனிதா தற்கொலை தினம். நீட் தேர்வால் நிறைய பயிற்சி மையம் வந்துள்ளன. வீடு நிலத்தை விற்று இந்த பயிற்சியில் சேர்த்து வாழ்நாள் சொத்தை பலரும் இழந்துள்ளனர். தேர்வையும் முறையாக நடத்துவதில்லை. இதனை எதிர்த்து டெல்லியில் மாணவர் போராடினர். இதற்கான போராட்டத்தில் தமிழ்நாட்டில் காவல் துறையை வைத்து அடக்குமுறையை கையாண்டார்கள். அனிதாவை நினைவு கூற வேண்டும். நீட்டிற்க்கு எதிரான விழிப்புணர்வு அவரால் ஏற்பட்டது.
மதசார்பற்ற ஜனநாயக சோசலிச கூட்டாட்சி இங்கே நடக்கிறதா.? மராட்டியத்தில் பசு பாதுகாப்பு கூட்டம், மாடு வாங்கி சென்றவர்களை அடித்து உதைத்தனர். பசு சாணத்தை வாயில் திணித்தனர். மாடு வியாபாரம் இயல்பாக நடக்க கூடியது. இதனை கொடூரமான விசயமாக மாற்றி உள்ளனர். போலீசார் வழக்கை பதிவு செய்ய மறுத்துள்ளனர். மத வெறியர்கள் மீது 15 நாட்கள் கழித்து வழக்கு போடப்பட்டுள்ளது. இது போன்று வடமாநிலங்களில் தொடர்ந்து நடக்கிறது. என் உணவு என் உரிமை. மத மோதலை திட்டமிட்டு உருவாக்க நினைக்கிறார்கள்.
இதையும் படிங்க: "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!