கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் 2025 ஜூலை 8 அன்று நடந்த ரயில் விபத்தில், ஆச்சாரியா என்ற தனியார் பள்ளியின் வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் சங்கர், மாணவர் விஷ்வேஸ், மற்றும் அருகில் நின்றிருந்த அண்ணாதுரை ஆகியோர் காயமடைந்தனர். மேலும், மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விசாரணையில், ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. அவர் கேட்டை மூடாமல் திறந்து வைத்திருந்ததாகவும், கேட்டை மூடியதாக பொய்யான தகவல் அளித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், பங்கஜ் சர்மா பணி நீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கு உட்பட மரணத்திற்கு காரணமாக இருத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தெற்கு ரயில்வே, கடலூர் ஆட்சியர் ஒரு வருடமாக சுரங்கப்பாதை அனுமதி தரவில்லை என குற்றம்சாட்டியது, இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவின்படி, அனைத்து ரயில்வே கேட்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு, இன்டர்லாக் சிஸ்டத்தை விரிவுபடுத்தவும், 15 நாட்கள் ஆய்வு தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: 2 நிமிஷம் கூட நிக்கல... இதுவே ஜெ.வா இருந்திருந்தா? நொந்துபோன அதிமுகவினர்..!
இந்த நிலையில், மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது. சுரங்கம் அமைப்பதற்கு ஓராண்டாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் சுரங்கம் அமைக்க ஏன் ஒப்புதல் தரவில்லை என தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: எல்லாமே பொய்! கேட் கீப்பர் தூங்கிட்டு தான் இருந்தாருங்க... நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்..!