கடலூர் செம்மங்குப்பத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கியதே விபத்திற்கு காரணம் என குற்றசாட்டப்பட்டது. ஆனால் அவரோ ஓட்டுநர் கூறியதால் தான் கேட்டை மூடவில்லை என வாக்குமூலம் கொடுத்திருந்தார். ஆனால் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கேட் கீப்பர் தூங்கியதாகவும், ரயில் வருவதற்கான எந்த அறிகுறிகளுமே தெரியாததே விபத்துக்கான காரணம் என்றும் கூறினர்.
இதனையடுத்து விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை திறந்து வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. விபத்து நடந்த அன்று காலை 6.45 மணி அளவில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கிராஸ் செய்யும் போதே ரயில்வே கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதன் பின்னர் சரியாக ஒரு மணி நேரம் கழித்து 7.45 மணிக்கு ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் மூலம் பங்கஜ் சர்மா கூறியது பொய் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது பங்கஜ் சர்மா வேன் ஓட்டுநர் கேட்டதால் கேட்டை திறந்துவிட்டதாகவும், நிறைய வாகனங்கள் கூடியதால் அவர்களும் கேட்டை திறக்க வலியுறுத்தியதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். அவை அனைத்துமே பொய் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே கேட்டில் நடந்த அதிர்ச்சி... அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட ரயிகள்.. வெளியான பரபரப்பு தகவல்
ரயில்வே கேட்டை மூடாமலே மூடிவிட்டதாக ஒரு ரகசிய எண்ணை வந்து அவர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு வந்து கொடுத்திருக்கிறார். அதாவது ரயில்வே கேட்டை மூடியதற்கான இரண்டு டிஜிட் ரகசிய எண்ணை கேட் கீப்பர்கள், ஸ்டேஷன் மாஸ்டருக்கு கொடுப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக எண்ணைக் கொடுத்திருக்கிறார். மேலும் வந்து விபத்துக்கு பிறகு ஸ்டேஷன் மாஸ்டர் வந்து கேட்ட போது, கேட்டை மூடவில்லை என அவர் அவர் ஒப்புக்கொண்டதும்ரயில்வே உடைய வாய்ஸ் ரெக்கார்டில் வந்து பதிவாகி இருக்கிறது. இந்த விபத்திற்கு முழுக்க முழுக்க கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்பது தற்போது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய ஏர் இந்திய விமான விபத்து... வெளியானது உண்மை காரணம்...!