நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக மொத்தம் 15 பக்க அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர், கருப்புப் பெட்டி மூலம் தகவல் சேகரித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில்,விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியாகினர். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கல்லூரிக் கட்டிடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் பலியாகினர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் தேதி சமர்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (ஜூலை12ம் தேதி) நள்ளிரவு வெளியானது. இதன்படி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது. சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தினமும் பிரியாணி விருந்து... திருமங்கலத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக, அதிமுக...!
மீட்கப்பட்ட காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் எஞ்சினுக்கு செல்லும் எரிபொருளை துண்டித்தீர்கள் என்று கேட்பதும், .அதற்கு மற்ற விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார் எனக்குறிப்பிடபப்ட்டுள்ளது. சுவிட்சுகள் மீண்டும் ஆன் செய்யப்பட்டு இயந்திரம் மீண்டும் உந்துதல் பெற்று விமானம் செயல்படுவதற்குள் விபத்து நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: யானை சின்னம் வழக்கு: கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. மனுவை வாபஸ் வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி..!
மரங்களில் மோதிய விமானம்:
விமானம் உயரத்தை இழந்து கொண்டிருந்ததால், அது ஆரம்பத்தில் இராணுவ மருத்துவப் படை வளாகத்திற்குள் இருந்த தொடர்ச்சியான மரங்கள் மற்றும் புகைபோக்கி மீது உரசியுள்ளது. பின்னர் கட்டிடம் A இன் வடகிழக்கு சுவரில் மீது மோதியுள்ளது. விமானம் முதலில் தொடர்பு கொண்ட மரத்திற்கும் விமானம் மோதிய கட்டிடம் A இல் உள்ள புள்ளிக்கும் இடையிலான தூரம் 293 அடி என அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
விமானம் முன்னோக்கி நகரும்போது, அது தொடர்ந்து துண்டு துண்டாக உடைந்து, மற்ற கட்டமைப்புகள் மற்றும் மரங்களுடன் மோதியதாகவும், கட்டிடம் மற்றும் விமானத்தின் மீது ஏற்பட்ட மோதலின் சாட்சிய அடையாளங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானச் சிதைவுகள் :
விமானம் புறப்பட்ட பிறகு, பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விமானம் மோதியதாக விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியது, இது ஓடுபாதை 23 இன் புறப்படும் முனையிலிருந்து 0.9 NM தொலைவில் உள்ளது. இந்த நிகழ்வின் போது அவசர இருப்பிட டிரான்ஸ்மிட்டர் (ELT) செயல்படுத்தப்படவில்லை. முதல் மோதலின் புள்ளியிலிருந்து கடைசியாக அடையாளம் காணப்பட்ட விமானப் பொருள் வரை, இடிபாடுகள் தோராயமாக 1000 அடி x 400 அடி பரப்பளவில் பரவியிருந்தன.