கடலூர் சிப்கார்ட் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வந்து கொண்டிருக்கின்றன. அங்கு இந்தியன் பாஸ்பேட் என்ற ரசாயன தொழிற்சாலை சிப்கார்ட் பகுதிக்கு உட்பட்ட சன்பிளி குப்பமன்ற பகுதியில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஒரு பகுதி தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், மற்றொரு பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
சற்று நேரத்திற்கு முன்பு தொழிற்சாலையில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் அதில் சிக்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க ஆரம்பித்தனர். அதில் இளமதி என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுல வந்து ஒரு பெண் தொழிலாளி
மற்றொரு தொழிலாளியான இந்திரா என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும். அவர் சற்று முன்பு வந்து உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக தற்போது இரண்டு பெண்கள் உடலையும் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து இந்த விபத்துக்கான காரணம் என்பது குறித்தும் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... விநாயகர் சிலை தயாரிப்பு மையங்களில் வருவாய்த்துறை திடீர் ரெய்டு...!
இதையும் படிங்க: தவெக மாநாட்டில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.. புதுசு வாங்கி தருவதாக விஜய் உறுதி..!!