மயிலாடுதுறையில் விநாயகர் சிலை தயாரிப்பு மையங்களில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. விநாயகர் சிலை தயாரிக்க தடைசெய்ய ரசாயன பவுடர் பயன்படுத்திய தயாரிப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆக மயிலாடுதுறை மணக்குடி மற்றும் மூங்கில் தோட்டத்தில் விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது .
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ரசாயன பூச்சு மற்றும் பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் உபயோகப்படுத்தி சிலை தயாரிக்க கூடாது என்று அரசு தடை செய்துள்ளது.
இதையும் படிங்க: காலையிலேயே அதிரடி.. 10 இடங்களில் ஐ.டி. ரெய்டு.. வெளியானது பரபரப்பு தகவல்...!
காகித கூழ் மற்றும் இயற்கை வர்ணங்களை கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை விட ரசாயன பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளை மலிவாக கிடைக்கிறது.
மூங்கில்தோட்டம், மணக்குடி பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் வட்டாட்சியர் சுகுமாறன், காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர், மூங்கில் தோட்டம் பகுதியில் உள்ள மையத்தில் தடைசெய்யப்பட்ட ரசாயன பவுடர் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு. விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: சிக்கியது முக்கிய ஆவணங்கள்... சிக்கலில் சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள்... ஐ.டி. சோதனையில் அதிரடி திருப்பம்...!