கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வாகனம் ஒன்று கடக்க முயன்றுள்ளது. பள்ளி வாகனம் மீது எதிர்பாராத விதமாக ரயில் மோதி உள்ளது. இந்த சம்பவத்தில் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும், மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கலையும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் - செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை இன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணித்த பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் ரயில் மோதியதில் பள்ளி வாகனம் இழுத்து செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய பள்ளி வாகனத்தில் 4 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் பயணித்துள்ளனர். இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற இரண்டு மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING ரயில் மோதி சுக்கு நூறான பள்ளி வேன்.. நெஞ்சை உலுக்கும் கோரம்.. 2 மாணவர்கள் உட்பட 4 பேர் பலி..!

இந்தக் கோரைவிபத்துக்கு காரணம் கேட் கீப்பர் தான் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர். விபத்துக்கு காரணமாக கூறப்படும் ரயில்வே கேட் கீப்பர், எப்போது சென்று கூப்பிட்டாலும் கண்களை துடைத்து கொண்டு தூங்கிய நிலையிலேயே வெளியே வருவார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல நேரத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் செல்போனில் வீடியோ பார்ப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயர செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகவும் உயிரிழந்த மாணவர் செல்வங்கள் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தி உடலோடு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவ அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாகவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓயாத தந்தை - மகன் பிரச்சனை! மாற்று கட்சிகளை நாடும் பாமகவினர்... முற்றுப்பெறுகிறதா பாமக அரசியல்?