தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சனை முற்றுப்பெறவில்லை. இன்று முடியும் நாளை முடியும் என்று எதிர்பார்த்து இருந்த பாமக தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. பாமகவை இரண்டாக உடைத்து துண்டாடி அன்புமணி ஒரு பக்கம் நிர்வாகிகளை நியமிப்பதும் ராமதாஸ் ஒரு பக்கம் நிர்வாகிகளை நியமனம் செய்வதுமாக போய்க்கொண்டிருக்கிறது. கட்சிக்கு யார் தலைவர், எவர் நியமிக்கும் நிர்வாகிகள் செல்லுபடி ஆகும், எதிர்காலத்தில் பாமகவின் முகம் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எல்லாம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அனைத்து கட்சிகளும் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பூத் கமிட்டி அமைப்பது, கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது. இதன் உச்சபட்சமாக அன்புமணியின் பதவியையே ராமதாஸ் பறித்து விட்டார். பா.ம.க. நிர்வாகக்குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். மேலும், 21 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார்.
இதையும் படிங்க: உயர்கல்விக்கே END CARD போட்டாச்சு… எதுக்கு இந்த அரசு! கொந்தளித்த அன்புமணி

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சிவப்பிரகாசம், பு.தா. அருள்மொழி, தீரன், திருக்கச்சூர் ஆறுமுகம், ஏ.கே. மூர்த்தி, முரளி சங்கர், சையது மன்சூர் உசேன், துரை கவுண்டர், அருள், நெடுங்கீரன், கவிஞர் ஜெய பாஸ்கரன், முத்து குமரன், வைத்தியலிங்கம், அன்பழகன், பரந்தாமன், ம.க ஸ்டாலின், கரூர் பாஸ்கரன், சுஜாதா கருணாகரன், சரவணன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
மற்றொரு பக்கம், ராமதாசுக்கு ஆதரவு தருபவர்களை அன்புமணி பொறுப்பிலிருந்து நீக்கி வருகிறார். குறிப்பாக பாமக எம்எல்ஏ அருளை பொறுப்பில் மட்டுமல்லாது கட்சியிலிருந்தே நீக்கி உத்தரவிட்டார். சபாநாயகர் இடம் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேரடியாகவே சென்று கடிதம் கொடுத்து வலியுறுத்தலை முன் வைத்தனர். இப்படி போய்க்கொண்டிருக்கும் சூழலில் பாமக தொண்டர்கள் மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர்.

அரசியல் எதிர்காலம் கருதி பாமகவை சேர்ந்தவர்கள் அவ்வப்போது மாற்றுக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பாமகவைச் சேர்ந்த 200 பேர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். பாமகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் காசி. நெடுஞ்செழியன் தலைமையில் பாமகவினர் 200 பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: அன்புமணி பதவி பறிப்பு... தலையில் இடியை இறக்கிய ராமதாஸ்... தொண்டர்கள் அதிர்ச்சி