2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியில் பிளவு ஏற்பட்டது. சண்முகம் தலைமையிலான பிரிவினர் தவெக அரசுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தனர். மே 12, 2026 அன்று சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தவெகவுக்கு ஆதரவு” என்று அறிவித்தார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சண்முகம் அணியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மே 25-26, 2026 அன்று மூன்று முதல் நான்கு எம்எல்ஏக்கள் வரை ராஜினாமா செய்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைந்தனர். இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. சண்முகம்-வேலுமணி அணியினர் சிலர் ஈபிஎஸ் அணியுடன் மீண்டும் இணைந்தாலும், பிளவு தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகள் விலகியும், தவெக பக்கம் நகர்வதாகவும் செய்திகள் வந்தன. இருப்பினும், சண்முகம் தானே அதிமுகவில் இருந்து முழுமையாக விலகவில்லை. அவர் மயிலம் தொகுதி எம்எல்ஏவாகத் தொடர்கிறார். ராஜ்யசபா உறுப்பினர் பதவியைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராஜினாமா செய்திருந்தார்.
இதையும் படிங்க: விஜயை வீழ்த்த இதுதான் ப்ளான்!! இடைத்தேர்தலுக்கு குறி வைத்த எடப்பாடி பழனிசாமி! நிர்வாகிகளுக்கு உத்தரவு!
இருப்பினும் அவர் தற்போது அதிமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து கூண்டோடு விலக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். சிவி சண்முகத்தின் மாவட்ட செயலாளர் பொறுப்பை பறித்ததோடு ஆதரவாளர்களின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. அதிமுகவிலில் இருந்து சி.வி ஷண்முகம் திலகவள்ளதாக கூறப்படும் நிலையில் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு பயணித்துள்ளனர். திண்டிவனம் முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் சென்னையில் உள்ள எம்ஜிஆர் மாளிகை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எடப்பாடி சொத்துக்கு குறி வைத்த செங்கோட்டையன்... முதலமைச்சர் காதுகளை எட்டப்போகும் முக்கிய விவகாரம்...!