வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

முரசு புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தல்!

முரசு புயல் கரையைக் கடக்கும்போது 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், 1,300 முகாம்கள் தயாராக உள்ளதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'முரசு' தீவிரப் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் ஆந்திரப் பிரதேசம் ஓங்கோல் அருகே கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 60 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் (SEOC) செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். 

வங்கக்கடலில் தீவிரப் புயலாக நிலை கொண்டுள்ள 'முரசு' புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு 11:30 மணி முதல் நாளை அதிகாலை 4:00 மணிக்குள் தென் ஆந்திரக் கடற்கரைப் பகுதியான நெல்லூருக்கும் நரசாப்பூருக்கும் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழையும், கரையைக் கடக்கும் தருணத்தில் மணிக்கு 60 கி.மீ வேகம் வரை சூறாவளிக் காற்றும் வீச வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ALERT..!! வங்கக்கடலில் விஸ்வரூபம் எடுக்கும் முரசு..! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள்..!

அதிவேகக் காற்று வீசும்போது மரங்கள் முறிந்து விழவோ அல்லது மின் கம்பங்கள் சாயவோ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை எக்காரணம் கொண்டும் தொடக் கூடாது. பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் வீசும் நேரங்களில் மக்கள் தேவையின்றி வெளியே வராமல் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்வதுடன், அவசரத் தேவைக்காக டார்ச் லைட்டுகளை முழுமையாக மின்னேற்றம் (சார்ஜ்) செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

புயல் காரணமாகக் கடல் சீற்றம் மிகக் கடுமையாகக் காணப்படும் என்பதால், பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என ஏற்கனவே மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக 3 மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் (SDRF), 3 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் (NDRF) என மொத்தம் 6 மீட்புக் குழுக்கள் நவீன உபகரணங்களுடன் முழு தயார் நிலையில் களமிறக்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 1,300 நிவாரண முகாம்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முதல் மழை பெய்து வந்த போதிலும், இதுவரை எவ்வித அசம்பாவிதங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தற்போதைய சூழலில் முகாம்களில் மக்கள் யாரும் தங்க வைக்கப்படவில்லை. பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: முரசு புயல் எதிரொலி: பாம்பன், கடலூர் உள்பட 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்றம்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी