இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த லாரிகள் எண்ணெய் நிறுவனங்களின் (IOC, BPCL, HPCL) எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் ஆலைகளுக்கு எல்பிஜி-யை புழக்கத்தில் உள்ள 5,514 டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றன.
பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக தெரிவித்து சமையல் விரிவாயு சிலிண்டர்கள் என்று சொல்லும் நாரிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான டெண்டர் நிபந்தனைகளை தளர்த்த ஒப்புக்கொண்டதை அடுத்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களின் சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்ந்தது.
இதையும் படிங்க: அநாகரீகப் பேச்சால் அம்பலப்பட்ட பழனிச்சாமி.. முதல்ல பாலபாடம் படிங்க! திமுக விமர்சனம்..!

இந்த நிலையில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் லாரிகள் இயங்காது என்றும் நாள் ஒன்றுக்கு 34 கோடி இழப்பு ஏற்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எங்கும் இந்தியன் ஆயில் நிறுவன சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
Tdg விதிமுறைகள் என்ற பெயரில் சாத்தியமற்ற செயல்முறைகளை பின்பற்றக் கூறி அபராதம் விதிக்கக்கூடாது என்றும் ஈரோடு, சேலம், திருச்சி இந்தியன் ஆயில் சிலிண்டர் நிரப்பும் உற்பத்தித்திறனை பாதியாக குறைக்க கூடாது எனவும் வலியுறுத்தின.
மேலும் அனைத்து லாரிகளுக்கும் சமமான வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தேவைக்கு அதிகமான லாரிகளை டெண்டர் எடுத்து பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
முடிந்து போன டெண்டர்களுக்கான வாய்ப்புத் தொகையை திரும்ப தராமல் காலம் தாழ்த்துவதற்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: படங்கள் பெட்டிக்குள்ள தூங்குது... உதயநிதி ஸ்டாலினுக்கு தான் எல்லா பெருமையும்! விளாசிய இபிஎஸ்