காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்து ஐந்தாயிரம் கன அடியை எட்டியது.

கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் சிறுவாணி அணை நீர்மட்டம், கன மழை காரணமாக ஒரே நாளில், 30.24 அடியாக உயர்ந்துள்ளது. சோலையார் அணைநீர்மட்டம் 45.15 கன அடியாகவும், நீர்வரத்து 4515.74 கன அடியாக உள்ளது.
இதையும் படிங்க: நீலகிரியை சிதைக்கும் மழை.. மண் சரிவு..! முகாம்களுக்கு செல்லும் மக்கள்..!!

பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 30.75 கன அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 4745 கன அடியாக உள்ளது. மேலும்,ஆழியார் அணை நீர்மட்டம் 78.60 அடியாகவும் நீர்வரத்து 896 கன அடியாகவும் உள்ளது. உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 55 புள்ளி 75 அடியாக உள்ள நிலையில், அமராவதி அணையின் நீர்மட்டம் 57.80 அடியை எட்டி உள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: #RED ALERT: கோவை, நீலகிரியை மழை புரட்டி எடுக்கும்.. ஆரஞ்சு அலர்ட் எங்க தெரியுமா?