கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் அதிக கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நெல்லை மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரெட் அலர்ட்டால் தீவிர கண்காணிப்பில் கோவை, நீலகிரி.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை!

தொடர்ந்து, 27 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவைக்கு ரெட் அலர்ட்.. மக்களே முக்கியமான தொடர்பு எண்களை குறிச்சு வச்சுகோங்க.!