தொகுதி மறு வரையறை விஷயத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது, இந்திய அரசியல் அமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தையும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் ஒரு நீண்டகால போராட்டமாக வெளிப்படுகிறது. இந்த எதிர்ப்பு 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறு வரையறை செயல்முறையை மையமாகக் கொண்டது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும் இந்த நடவடிக்கை, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் என்று கருதுகின்றனர். தொகுதி மறு வரையறை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் செயலாகும்.

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது என கூறினார். மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பியூஷ் கோயலுக்கு நாவடக்கம் தேவை! தமிழகத்தை விமர்சித்த மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும் எனின் அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும் எனவும் தெரிவித்தார். மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும். இதன்மூலம் மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும் என்றும் அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் உறுதி! மேற்குவங்கத்தில் அமித் ஷா அதிரடி!