சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாநில அரசு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக சென்னையில் மழை தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கூட கொண்டாட விடாமல் மழை பெய்தது. மழை வெள்ளத்தை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், சென்னை நகர போலீசாரை உஷார்படுத்தி போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளார். சென்னையில் 12 துணை கமிஷனர்கள் தலைமையில் மழை வெள்ளத்தை சமாளிக்க 12 பேரிடம் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் இந்த பேரிடர் மீட்பு படைகளில் இடம்பெற்றுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. மற்றொருபுறம் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி... விஜயை மீண்டும் சீண்டும் உதயநிதி ஸ்டாலின்...!
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொலைபேசி அழைப்புகள், சோசியல் மீடியாக்கள் மூலமாக வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நானே நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று சிலருக்கு போன் செய்து மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். அந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளேன். டெல்டா மாவட்டங்களைக் கண்காணிக்க முதலமைச்சர் அமைச்சர்களை நியமித்துள்ளார். அதுமட்டுமின்றி மாவட்ட ஆட்சியர்களுடனும் நேரடியாக ஆய்வு நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கனமழை பகுதிகளில் முகாம்கள் தயாராக உள்ளன. காலையில் 4 மணியில் இருந்தே எங்கெல்லாம் சாப்பாடு தேவையோ? அங்கெல்லாம் சமையலுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மாநில அரசு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆபத்து..! முழு கொள்ளளவை எட்டும் பூண்டி நீர்த்தேக்கம்... கண்காணிப்பு தீவிரம்..!