கடந்த சட்டமன்றத் தேர்தலில் சத்தியபாமா அதிமுக சார்பில் போட்டியிட்டு தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட காலியிடத்துக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா மீண்டும் போட்டியிட்டார். இதனால் தாராபுரத்தில் பெரும்பாலான இடங்களில் சத்தியபாமாவின் பிரசாரத்திற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சில இடங்களில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதனிடையே, இன்று காலை தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மதுக்கம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து சத்தியபாமா தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தவெகவில் இணைந்ததையே படு கொச்சையாக விமர்சித்த சத்யபாமா... தாறுமாறு வைரலாகும் வீடியோ...!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கை செலுத்தியுள்ளார். ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், தாராபுரம் மட்டுமின்றி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தவெகவில் இணைந்ததை சத்தியபாமா தாறுமாறாக விமர்சிக்கும் வீடியோ ஒன்று காலை முதலே சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக வாக்களித்தப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தேர்தல் தொடங்கியதிலிருந்தே உங்களுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது உங்களைப் பற்றி விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி, எல்லாமே சித்தரிக்கப்பட்டதுதான். அந்த வீடியோவும் சித்தரிக்கப்பட்டதுதான் என்றார். அந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பதையும் கண்டுபிடித்துவிட்டோம் எனக்கூறினார்.
அந்த வீடியோதேர்தல் முடிவை பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லை. இது சித்தரிக்கப்பட்டது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றார்.
வேட்பாளராக நீங்கள் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு நிச்சயமாக புகாரளிப்பேன் என்றும் தெரிவித்த அவர், தனக்கு தேர்தல் தொடங்கியதில் இருந்தே வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: “நான் எந்த பெட்டியும் வாங்கவில்லை...” - விரட்டி விரட்டி துரத்தும் தாராபுரம் மக்களிடம் கதறிய தவெக வேட்பாளர் சத்யபாமா...!