தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் நாம் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அவதூறு பரப்பியதாக திருச்சி மாவட்ட குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி. வருண் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சீமான் நேரில் ஆஜராக வேண்டும் இல்லையெனில், பிடிவாராண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது சீமான் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். கடந்த முறை இனி ஆஜராகுவேன் என சொல்லிதானே சென்றீர்கள் என கேட்ட நீதிபதி, சீமான் தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதி இது தான் கடைசி வாய்ப்பு என எச்சரித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் அண்ணே தூண்டில அங்கிட்டு போடுங்க... ஆதரவாளர்கள் கொடுத்த ஐடியா...!

இதையும் படிங்க: அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!