தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: தாராபுரத்தில் ஏற்கனவே வாக்களித்து இரட்டை இலையை ஜெயிக்க வைத்த தெய்வங்கள் நீங்கள் 81 ஆயிரம் வாக்கு வித்தியாசம் வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தல் தேவை இல்லை இந்த இடைத்தேர்தல் நடந்திருக்கக் கூடாது இடைத்தேர்தல் என்றால் எம்எல்ஏ செத்துவிட்டார் என்றால் இடைத்தேர்தல் நடைபெறும். அது மாதிரி இடைத்தேர்தல் நடக்கவில்லை என்ன செய்வது என்றும் நமக்கு தெரியவில்லை, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தற்பொழுது மாற்றுக் கட்சிக்குச் சென்ற துரோகி அவரை அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும். தெய்வம் இருக்கும் என்றால் இரட்டை இலைக்கு மீண்டும் வெற்றி கிடைக்கும்.
1972ல் எம்ஜிஆர் வெற்றிபெற்ற பொழுது யார் யாரெல்லாம் இருந்தீர்கள் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டார் அப்பொழுது ஐந்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கையை தூக்கினர் பரவாயில்லை மெஜாரிட்டியாக இருக்கிறீர்கள் என கூறி கடந்த காலங்களில் ஆளுகின்ற கட்சியாக இருந்த ஸ்டாலினை பார்த்து தற்போதைய முதலமைச்சர் விஜய் லஞ்சத்தின் மொத்த உருவம் ஸ்டாலின் என்று கூறினார். டாஸ்மார்க் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கிறார்கள் என அப்போது கூறினார். ஒரு முன்னணி கதாநாயகன் இதுபோன்று சொல்வது உண்மைதான் என விஜய் சொன்னதை மக்கள் நம்பி விட்டார்கள். அவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் தேர்தலில் நிற்கப் போகிறாள் என்றெல்லாம் தெரியாது. அப்பொழுது திமுகவை கண்டித்து பேசியவர் அதிமுகவை ஒரு உதிரி கட்சி என்று கூறினார். அதிமுக ஒரு கட்சியே இல்லை என்று முதலமைச்சர் விஜய் பேசுகிறார். அதற்கு நாம் ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று கூறுகிறார். சினிமா உலகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதித்து வைத்துள்ளார். அதனால் ஒரு பைசா கூட நான் பணத்தை தொட மாட்டேன் அரசாங்கத்தின் பணத்தை தொட மாட்டேன் என்று கூறினார். அப்படி கூறிய உத்தமர் தான் இங்கே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அந்த அம்மாவை 50 கோடி ரூபாய் கொடுத்து விலக்கி வாங்கியுள்ளார். இது போன்ற செயல் செய்த நீ ஒரு உத்தமரா? யோக்கியனா? நீ லஞ்சம் வாங்க மாட்டேன் என்று சொன்னது உண்மைதானா? மக்களை நீ ஏமாற்றி உள்ளாய். விஜய் நியாயமாக இருந்தால் 108 எம்எல்ஏ பெற்றுள்ளார். மக்கள் போதுமான மெஜாரிட்டி கொடுக்கவில்லை எனக் கூறி உங்களுடைய ஓட்டு எனக்கு தேவையில்லை என்று பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் தலைவிரித்தாடும் மின்வெட்டு... விஜய்யின் மின்வாரிய விசிட்டை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!
மறுபடியும் தேர்தலை சந்தித்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாங்களும் உங்களை மதித்து இருப்போம். ஆனால் லஞ்சம் வாங்க மாட்டேன் என கூறிவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிமுக எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி உள்ளார். ஒவ்வொரு எம்எல்ஏக்கும் 50 கோடி ரூபாய் விலை பேசி விலைக்கு வாங்கியுள்ளார். முதல் ஆளாக தற்பொழுது நிற்கின்ற டிவிகே வேட்பாளரை வாங்கி உள்ளார். தாராபுரம் டிவிகே வேட்பாளர் எங்கே பிரச்சாரத்திற்கு சென்றாலும் பொதுமக்கள் எது கையில் கிடைத்ததோ அதை வைத்து அவரை விரட்டி அடிக்கிறார்கள்.
நேற்றைக்கு ஒரு பிரச்சாரத்திற்குச் சென்ற டிவிகே வேட்பாளரை பார்த்து எத்தனை கோடி வாங்கிவிட்டு பதவியை ராஜினாமா செய்தாய் என பொதுமக்களே கேள்வி கேட்டு அவரை துரத்துகின்றார்கள். 50 கோடி பணத்தை வாங்கிவிட்டு நீ கட்சி மாறி உள்ளாய் நீ என்னுடைய ஊருக்கு வராதே என பொதுமக்கள் விரட்டி அடிக்கிறார்கள் நான் என் பிள்ளை மீது சத்தியம் செய்கின்றேன். நான் பணம் வாங்கவில்லை என அவர் கூறுகிறார் சாமி இருந்தால் அவரை கேட்கட்டும். நான் என்னுடைய வயதில் ஏராளமான தேர்தலை சந்தித்துள்ளேன். ஆனால் தற்பொழுது காவல்துறை பாதுகாப்புடன் ஓட்டு கேட்கும் ஒரு தேர்தல் பிரச்சாரத்தை இப்போதுதான் பார்த்து உள்ளேன். போலீஸ் கூட வந்தால் தான் ஓட்டு கேட்க முடியும் என்ற நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அப்படி ஒரு நிலைமையை அவருக்கு தாராபுரம் மக்கள் உருவாக்கியுள்ளார்கள். தாராபுரம் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு நீங்கள் போட்ட 86 ஆயிரம் வாக்கால் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வீதி வீதியாக வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதியிலும் ஒரு சில இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்த நிலையில் தற்பொழுது தாராபுரம் இடைத்தேர்தலுக்காக பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு எவ்வளவு பயம் வந்துள்ளது. பாருங்கள் 234 சட்டமன்ற தொகுதியிலும் ஒரு சில இடத்தில் மட்டும் தான் தேர்தல் பிரச்சாரம் செய்தார். காக்கா உட்கார பணமெல்லாம் கிடைத்தது போல் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை நடத்துவது இதை விட ஒரு கேவலம் அசிங்கம் அவருக்கு கிடையாது. அதிமுக நிர்வாகிகள் இதுபோன்று பேசுகிறார்களே அது சரியா தவறா என தமிழ்நாடு முதலமைச்சர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 234 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் ஆனால் எந்த வாக்குறுதியும் செய்யவில்லை திருப்பதி நாமத்தையும் திருநெல்வேலி அல்வாவையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதிமுகவுக்கும் நடக்கும் தேர்தல் தான் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஐந்து வருடம் ஆகுமே என கூறுவார்கள் இல்லை கரூர் சம்பவம் சிபிஐ நடத்திக் கொண்டிருக்கிறது .
கரூர் சம்பவத்திற்கு மத்திய அரசாங்கம் சிபிஐ விசாரணை வைத்துள்ளது .அந்த வழக்கு ரெடியாக இருக்கிறது 42 பேரை பலி வாங்கிய விஜய் 75 நாட்கள் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர முடியாமல் இருந்தார் ஆதார் ஜுனா புஸ்லியானந்த் போன்றவர் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ராகுல் காந்தி எங்களுடைய கூட்டணி தலைவர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூறுகிறார்.
தற்பொழுது மத்திய அரசாங்கத்தை எதிர்க்காத ஒரு சூழ்நிலையில் ஆட்சி நடக்கிறது. ஒன்றிய அரசின் கொள்கை எங்களுக்கு புடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசுக்கு எத்தனை சலாம் வேணாலும் போடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்களையே எங்கள் மீது கேஸ் போட்டு விட்டார்கள் என கூறுகிறார்கள். கரூர் சம்பத்தை வைத்து எங்களை ஏதாவது பண்ணி விடாதீர்கள். 200 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு வித்தவர். அதுபோன்ற கணக்கை காண்பிக்காமல் இருந்தவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். உத்தமரை போல புத்தருடைய மச்சுணனை போல மகாத்மா காந்தி பேரனை போல பேசுவதை நாம் கண்டிக்க வேண்டும்.
திடீரென தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் செல்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் என பொய் கூறுகிறார். மெட்ராஸில் உள்ள நிறுவனத்திற்கு லண்டனில் கையெழுத்து போடுகிறார்கள். லண்டனில் போய் கட்டிப்பிடித்து கொஞ்சி கொள்கிறார்கள். லண்டனில் நடிகர் அஜித்தை கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார். லண்டனில் போய் கட்டி பிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அஜித் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டால் முதலமைச்சர் பதவி காலியாகிவிடும் என்று பயம் அதற்காகத்தான் அஜித்தை கட்டி பிடித்துக் கொள்கிறார். அதுதான் உண்மை அவர் அஜித் மீது பாசத்துடன் கட்டிப் பிடிக்கவில்லை இவரா அவரா என்றால் அஜித் தான் வெற்றி பெறுவார்.
அடுத்து இன்னொரு நடிகர் ஜனாதிபதியை சந்தித்து அவார்டு வாங்கியுள்ளார் அவர்தான் தனுஷ். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நடிகராக வெளியே வரப் போகிறார்கள் யாருமே இல்லாத காட்டில் நீங்கள் கேம் விளையாடலாம் ஆனால் உங்களுக்கு எதிராக ஏராளமானோர் திரும்பி வருகிறார்கள். மக்களை ஏமாற்றி நீங்கள் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் நியாயமாக ஆட்சி நடத்தினால் நாங்களே உங்களை பாராட்டுவோம் .
அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துவது ஒரு பிழைப்பா என்று பிரச்சாரத்திற்கு வரும் பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் பார்த்து நீங்கள் கேளுங்கள் தமிழக வெற்றிதீ கழக ஆட்சியில் விலைவாசி விண்ணை மட்டும் அளவிற்கு ஏரி உள்ளது பல்வேறு கொடுமைகள் நடைபெற்று வருகிறது இதை எல்லாம் கேட்டால் நாலு மாதத்திற்குள் எப்படி சரி செய்ய முடியும் என கூறுகிறார்கள் ஏன் அப்பா தேர்தல் நேரத்தில் அப்படி சொன்னீர்கள் சரி செய்து விடுவோம் என்று தமிழ்நாட்டில் கஜானா காலி ஆகிவிட்டது என கூறினீர்கள். ஆனால் 1200 கோடிக்கு தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பணிகளை மேற்கொண்டீர்கள்.
பழைய தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் ஆண்டார்கள் அவர்களெல்லாம் முட்டாள்களா தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கூட இருக்கும் அனைவருக்கும் பதவி லயோலோ மணி என்று அவருடைய ரசிகருக்கு அரசு பணி ஒரு ஜோசியருக்கு அரசு பணி வழங்கினார்கள் ஆனால் கம்யூனிஸ்டுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய பதவியை எடுத்து விட்டார்கள். இந்த ஆட்சி தற்பொழுது நீடித்து வருவது திமுகவால் ஜெயித்த கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தை கட்சிகள் காங்கிரஸ்கள் உள்ளிட்ட தயவில் தான் என பேசினார்.
இதையும் படிங்க: இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்..!! தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்.!