2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து கட்டங்களாக தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். வரும் 13-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார். திட்டப் பணிகளை பார்வையிடுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவற்றை அவர் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை திருப்பத்தூரில் உள்ள ராஜேஸ்வரி மகாலில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பாளர்களை உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆர் கே மஹாலில் மாவட்ட இளைஞரணி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி சார்! சட்டம் ஒழுங்கே ICU-ல தான் இருக்கு… அதிமுக செம கலாய்..!
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுகவினரை சந்தித்து ஊக்கப்படுத்த உள்ளார். அப்போது, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட திமுக தொண்டர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கௌரவிக்க உள்ளார்.
இதையும் படிங்க: திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!