2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இறுதிக் கட்ட தேர்தல் பரப்புரையை கொளத்தூர் தொகுதியில் நடத்தினார். இந்த தொகுதி 2011ஆம் ஆண்டு முதல் அவரது சொந்த தொகுதியாக இருந்து வருகிறது. மூன்று முறை வெற்றி பெற்று, நான்காவது முறையாகவும் இங்கிருந்து போட்டியிடும் ஸ்டாலின், தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதிக்கு முன்பாக பரப்புரையை நிறைவு செய்யும் வகையில் இந்த இறுதி நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

கொளத்தூர் தொகுதி சென்னையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது மீன் மற்றும் காய்கறி சந்தைகள் நிறைந்த பகுதியாகவும், நன்கு இணைக்கப்பட்ட குடியிருப்பு பகுதியாகவும் அறியப்படுகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவரது அடிக்கடியான வருகைகள் மற்றும் மக்களுடனான நேரடி தொடர்பு காரணமாக இங்கு அவருக்கு வலுவான ஆதரவு உள்ளது என்பது கள நிலவரம். தேர்தலில் அவருக்கு எதிராக அதிமுக சார்பில் ஆர். சந்தானகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எஸ். பாபு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இது முக்கோணப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி..! வில்லிவாக்கம் பரப்புரையில் முதல்வர் சூளுரை..!
கொளத்தூர் தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்தை நடத்தினார். வழி நெடுகிலும் காத்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையும் படிங்க: கோவை தெற்குல ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்குறானுங்க சார்!! திமுக ஆடும் தகிடுதத்தோம்! அதிமுக புகார்!!